Wednesday, April 30, 2008

அமெரிக்கா என்றால் என்ன?



அமெரிக்க மோகத்தை நக்கல் அடிக்கும் விதமான ஒரு வீடியோ.. நல்லா தான் இருக்கு..

Friday, March 14, 2008

பாத்தா அழுவிங்க ஆனாலும் கண்டிப்பா பாருங்க, வருந்தமாட்டிங்க

Carnegie Mellon பல்கலைகழகத்தை சேர்ந்த Randy Pausch, அப்படிங்கிற ஒரு விரிவுரையாளர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவரால் இன்னும் 5-6 மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கைவிடப்பட்டவர். Carnegie Mellon பல்கலை கழகத்தில் உள்ள ஒரு நடைமுறைப்படி, தன்னுடைய இறுதி விரிவுரையை அளிக்கிறார்.



மேலே உள்ள இந்த வீடியோ சுமார் பத்து நிமிடம் ஓடக்கூடியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ சுமார் ஒரு 76 நிமிடங்கள் ஓடக்கூடியது.



பொதுவா நமக்கு சில விஷயங்களை செய்யும் பொழுது நம்மையும் அறியாம கண்ணுல தண்ணி வரும். அது துக்கமா இல்ல சந்தோசமான்னு தெரியாது அப்படி ஒரு நிகழ்வு எனக்கு இந்த வீடியோவை பார்த்த பொழுது நிகழ்ந்தது.ஆனாலும் ஒரு நாலு தடவை பாத்தேன் இதை.