Tuesday, September 19, 2006

அமெரிக்காவின் மனித உரிமை லட்சணம்

அமெரிக்காவில் மனித உரிமை, தனி மனித சுதந்திரம் பற்றி ஜல்லி அடிக்கும் மக்களே இந்த வீடியோவை பாருங்க. ஒரு பெண் ஒருத்தி கையில் எவ்விதமான ஆயுதமும் இல்லாமல் அமைதியான வகையில் போராடும் பொழுது அவரை ரப்பர் குண்டால் தாக்கும் போலீஸாரின் கூட்டம். அத்தோடு நிறுத்தாமல் அவர்கள் அந்த பொண்ணை நோக்கி செய்யும் ஏளனப்பேச்சு வேறு. சும்மா நாய் குட்டி காணாமல் போனாலே ஊரைக்கூட்டி கூப்பாடு போடும் அமெரிக்க ஊடகங்கள் இதை பெரிது படுத்தியதாக தெரியவில்லை. இங்கு அமெரிக்க கம்பெனிகள், அரசுக்கு அடங்கி இருக்கும் வரை தான் சுதந்திரம் கொஞ்சம் எதிர்ப்பு காட்டினாலும் இது தான் நிலைமை. அமெரிக்கர்களுக்கு இது பழகிவிட்டது. இதைத்தான் அவர்கள் தரும் சுதந்திரத்தின் லட்சணம்.

">

5 comments:

லொடுக்கு said...

ஷ்ஷ்ஷ்!!! தனிமனித விடுதலை, மனிதநேயம் பற்றி எதுவும் தெரியாமல் உளராதீர்கள். அமெரிக்க எது செய்கிறதோ அதான் சரி. இந்த வீடியோ கூட தீவிரவாத தொலைக்காட்சி நிறுவனங்களின் க்ராஃபிக்ஸ் ஆக கூட இருக்கலாம்.


இப்படியெல்லாம் சொல்லி பின்னூட்டம் உங்களுக்கு குவியப் போகிறது. 100-க்கு வாழ்த்துக்கள்.

மருதநாயகம் said...

வல்லான் வகுத்ததே சட்டம். மனித உரிமை விஷயத்தில் மட்டும் அது விதிவிலக்கல்ல

Santhosh said...

//இப்படியெல்லாம் சொல்லி பின்னூட்டம் உங்களுக்கு குவியப் போகிறது. 100-க்கு வாழ்த்துக்கள்.///
உங்க வருகைக்கு நன்றி பாண்டி. தமிழ்மணத்துக்கு புதுசா நீங்க. இந்த மாதிரியான பதிவுக்கு யாரும் பின்னூட்டம் இட மாட்டாங்க. அதுவே "டேய் ............. நாயே அப்படின்னு ஒரு ஜாதி பெயரை வச்சி எழுதி இருந்தேன்னு வையுங்க 100 என்ன ஆயிரமே அடிக்கலாம் :)).

Santhosh said...

வாங்க மருதநாயகம்,
உலகம் முழுவது இப்படி ஆயிடிச்சி நிலைமை. ஜனநாயகம் எல்லாம் சும்மா கேலிப்பேச்சு ஆயிடிச்சி. எலெக்ஷன் வந்தா ஓட்டு போடுகிறோம்(அதும் selection of the worst) அவ்வுளவு தான்.

சிறில் அலெக்ஸ் said...

அடப் பாவிகளா அதுக்குள்ள வீடியோவத் தூக்கிட்டாய்ங்கப்பா தூக்கிட்டாய்ங்க