சதாம் உசேன் தூக்கில் இடப்படும் காட்சி. இந்த வீடியோ ஏதோ மொபைல் போனில் எடுத்து இருக்காங்ன்னு சொல்றாங்க உண்மையான்னு தெரியலை. இது எல்லா வயதினருக்கும் ஏற்றதல்ல. ஒரு மனுசன் எதுக்கு பயப்படவில்லை என்றாலும் சாவுக்கு கண்டிப்பாக பயப்படுவான். இங்க CNNல் பாருங்க அதைக்கூட பெரிது படுத்தி "Hussein Executed with fear on his face" அப்படின்னு போட்டு இருக்காங்க. இவனுக்களை தூக்கில் அது கூட வேணாம் CNN பில்டிங்குக்கு பத்து பில்டிங் தள்ளி குண்டு வெச்சி இருக்காங் அப்படின்னு சொன்னா போதும் என்ன ஓட்டம் ஓடுறாங்கன்னு.
மேலே குடுக்கப்பட்டுள்ள சுட்டி சரியாக தெரியவில்லை என்றால் இங்கே போயி பார்த்துக்கொள்ளலாம்
Saturday, December 30, 2006
Sunday, November 12, 2006
குழந்தையின் அழுவுற விளையாட்டு(Crying Game)
பொதுவா குழந்தைங்க அப்படின்னாலே அழகு அது குறும்பு பண்ற குழந்தைங்க ரொம்ப அழகு(அது அடுத்தவங்க குழந்தையா இருக்கும் பொழுது மட்டும்). சில குழந்தைங்க அடம்பிடிக்கும் பாருங்க பார்ப்பதற்கே அவ்ளோ அழகா இருக்கும். அதிலும் சில குழந்தைங்க அவங்க அடம் பிடிப்பதை யாராது பார்த்தா போதும் இன்னும் அதிகமா அடம் பிடிக்க அரம்பிக்கும். இந்த வீடியோவில் கூட அப்படித்தான் பாருங்க ஒரு குழந்தை அது அடம்பிடிக்கும் பொழுது யாரும் பார்க்கவில்லை அப்படின்னு யாராவது பார்க்கும் படியா போய் அடம்பிடிக்குது. இதுக்கு பேரு அழுவுற விளையாடாமுல்ல(Crying Game)
Sunday, November 05, 2006
ஜ லவ் யூ வாத்தியாரே
இந்த வீடியோவில் ஒரு வாத்தியார் தன்னுடைய சிஷ்ய கோடிகளிடம் தான் பாடம் நடத்திய விதம் குறித்து feedback கேட்டுப்பெறுகிறார். அந்த feedbackகில் அவர் பாடம் நடத்தும் முறைகளை தவிர மத்ததை பற்றி எல்லாம் கூறி இருக்கின்றனர். அதுல என்னோட favourite "No Grass on a busy road No hair on a clever head". இவனுங்க நிஜமாத்தான் சொல்லி இருக்காங்களா இல்ல அவரை வெச்சி காமெடி பண்ணி இருக்காங்களான்னு தெரியலை ஆனாலும் வீடியோவும் பசங்க சொல்லி இருக்கிற கமெண்டுகளும் நல்லா இருக்குதுங்கோ.
நன்றி : துர்கா இந்த வீடியோவை எனக்கு அனுப்பியதற்கு.
நன்றி : துர்கா இந்த வீடியோவை எனக்கு அனுப்பியதற்கு.
Tuesday, October 03, 2006
Use Condoms
ஆணுறை அணிவதால் பல நல்ல பயன்கள் உண்டு. அதை அணியாததால் இவரு எப்படி கஷ்டப்படுகிறார் அப்படின்னு பாருங்க. ஆணுறை பற்றி ஒரு நல்ல நகைச்சுவையான விளம்பரப்படம்.
Wednesday, September 27, 2006
பேன்டேஜ் காமிரா ஆகிய கேன்டிட் காமிரா
Cheaters என்பது நம்முடைய ஊரில் உள்ள candit camera போன்ற நிகழ்ச்சி. இந்த வீடியோவில் அது போன்ற ஒரு நிகழ்ச்சியில் ஒருவருடைய பெண் தோழியை வைத்து விளையாடப்போயி அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கத்தியால் குத்தப்படுகிறார். கீழே உள்ள வீடியோவில் அதை காணலாம்.
Tuesday, September 19, 2006
அமெரிக்காவின் மனித உரிமை லட்சணம்
அமெரிக்காவில் மனித உரிமை, தனி மனித சுதந்திரம் பற்றி ஜல்லி அடிக்கும் மக்களே இந்த வீடியோவை பாருங்க. ஒரு பெண் ஒருத்தி கையில் எவ்விதமான ஆயுதமும் இல்லாமல் அமைதியான வகையில் போராடும் பொழுது அவரை ரப்பர் குண்டால் தாக்கும் போலீஸாரின் கூட்டம். அத்தோடு நிறுத்தாமல் அவர்கள் அந்த பொண்ணை நோக்கி செய்யும் ஏளனப்பேச்சு வேறு. சும்மா நாய் குட்டி காணாமல் போனாலே ஊரைக்கூட்டி கூப்பாடு போடும் அமெரிக்க ஊடகங்கள் இதை பெரிது படுத்தியதாக தெரியவில்லை. இங்கு அமெரிக்க கம்பெனிகள், அரசுக்கு அடங்கி இருக்கும் வரை தான் சுதந்திரம் கொஞ்சம் எதிர்ப்பு காட்டினாலும் இது தான் நிலைமை. அமெரிக்கர்களுக்கு இது பழகிவிட்டது. இதைத்தான் அவர்கள் தரும் சுதந்திரத்தின் லட்சணம்.
">
">
Friday, September 01, 2006
அழகான பொண்ணு பண்றது தப்பே இல்ல
உலகத்துல பொண்ணுங்கன்னா ஒரு தனி கரிசனம் இருக்கும் அதும் அழகான பொண்ணுங்கன்னா கேட்கவே வேணாம் பாருங்க உலகம் இந்த வீடியேவுல பொண்ணுங்களுக்கு எவ்வளவு கரிசனம் காட்டுதூன்னு.
Thursday, June 01, 2006
சாப்டுவேர் ஆளு நானு
சாப்டுவேர் கம்பெனிகளில் நம்ம அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே கிடையாது. பாருங்க நம்ம ஆளு என்ன ஆட்டம் போடுறாருன்னு.
நம்ம ஊரு வண்டி
நம்ம ஊருல எப்படி எல்லாம் வண்டி ஓட்டுறாங்கன்னு படம் பிடிச்சி காட்டி இருக்காங்க பாருங்க. என்ன இருந்தாலும் நம்ம திறமையே தனிதாங்க என்ன சொல்றீங்க. அப்புறம் இந்த படத்தை நம்ம குமரன் தயவால் தியேட்டரில் ஓடுது எப்படி இருக்குன்னு பாத்துட்டு சொல்லுங்க.
Tuesday, May 02, 2006
தெய்வீக காதல்
என்ன சொன்னாலும் அந்த காலத்து காதல் அந்த காலத்து காதல் தானுங்க. அவங்க அவங்க சொல்லிக்குவாங்க ஏழு ஏழு ஜென்மத்துக்கும் நீ தான் என் பொண்டாட்டியா வரணும் அப்படின்னு ஆனா இங்க பாருங்க போன ஜென்மத்து பொண்டாட்டியை தேடி இவரு எப்படி வருகிறார் என்று.
Tuesday, February 21, 2006
புல் தடுக்கி பயில்வான்கள்
நம்ம ஊருல சும்மா ஜீம்முக்கு போயி அங்க இருக்குற சாமான் செட்டை எல்லாம் துடைச்சி வைக்கிற பயில்வானுங்க பல பேர் இருக்குறாங்க(நம்மளும் அப்படித்தான்.). இங்க பாருங்க ஒரே புல் தடுக்கு பயில்வானுங்களா இருக்குறானுங்க.
Tuesday, February 14, 2006
என்னாமா லவ்வை சொல்றான்பா
அவன் அவன் நிறைய பொண்ணுங்க பின்னாடி சுத்தி லவ்வை செல்லுவாங்க இங்க பாருங்க ஒரு பெண்ணுகிட்ட சுத்தி தன்னோட லவ்வை செல்லுறாங்க.
பாருங்க பொங்களுக்கு போட்ட படம் எல்லாமே ஊத்திகிச்சி அதுக்கு அப்புறம் போட்ட படமும் ஏதும் சரியா போகல. பாக்கலாம் காதலர் தினம் ஆவது நமக்கு கைகுடுக்குதான்னு.
பாருங்க பொங்களுக்கு போட்ட படம் எல்லாமே ஊத்திகிச்சி அதுக்கு அப்புறம் போட்ட படமும் ஏதும் சரியா போகல. பாக்கலாம் காதலர் தினம் ஆவது நமக்கு கைகுடுக்குதான்னு.
Thursday, February 09, 2006
தலைத்தும்மல்
நம்ம எல்லாம் தும்முன தலை ஆடும் இவருக்கு பாருங்க தும்முனா தலை தனியா வருது. அப்புறம் தியேட்டருக்குள்ள வரவங்க டிக்கெட் போட்டுட்டு போங்க சரியா? அதுதாங்க பின்னுட்டம் போடுங்க.
Thursday, February 02, 2006
அழுவாத ஆத்தா அழுவாத
வணக்கமுங்க,
பொங்களுக்கு போட்ட படம் எல்லாம் ஊத்திகிச்சிங்க(பின்ன ஒவ்வொரு பதிவுக்கும் 2 அல்லது 3 பின்னுட்டம் தான் வந்து இருக்கு.). காச திருப்பி கேட்டா மகனே நீயே ஓசியில நான் எடுத்த படத்தத திருப்பி போட்டுட்டு இருக்க பாத்தா நீ தான் எனக்கு காசு குடுக்கனும் அப்படின்னு youtube காரங்க செல்லிபுடாங்க. அளைவிடுங்கன்னு செல்லாம கொள்ளாம் ஓடி வந்துட்டேன்.
சரி அதனால் இவ்வளவு நாளா படம் எதும் போடாம இருந்தேன். அப்புறம் நம்ம தியேட்டர்ல இருக்கிற முறுக்கு கடைகாரர் அண்ணே படம் போட்டாலே ஏதும் தேறாது போடாட்டி நான் கடைய காலி பண்றேன் அப்படின்னு சென்னாரு சரி அப்படி இப்படின்னு வர கொஞ்சம் நஞ்ச வருமானமும் போயிடப்போகுதுன்னு துணிஞ்சி ஒரு படத்தை போடுறேன் பாத்துட்டு எப்படி இருக்குன்னு கண்டிப்பா செல்லுங்க.
பாருங்க இந்த படத்துல நம்ம ஊரு சீரியல் பாக்குற அம்மா போல இருக்கு. புள்ள நம்மளைப்போல நக்கல் புடிச்ச அராத்து போல் என்ன பண்ணுறான்னு பாருங்க.
பொங்களுக்கு போட்ட படம் எல்லாம் ஊத்திகிச்சிங்க(பின்ன ஒவ்வொரு பதிவுக்கும் 2 அல்லது 3 பின்னுட்டம் தான் வந்து இருக்கு.). காச திருப்பி கேட்டா மகனே நீயே ஓசியில நான் எடுத்த படத்தத திருப்பி போட்டுட்டு இருக்க பாத்தா நீ தான் எனக்கு காசு குடுக்கனும் அப்படின்னு youtube காரங்க செல்லிபுடாங்க. அளைவிடுங்கன்னு செல்லாம கொள்ளாம் ஓடி வந்துட்டேன்.
சரி அதனால் இவ்வளவு நாளா படம் எதும் போடாம இருந்தேன். அப்புறம் நம்ம தியேட்டர்ல இருக்கிற முறுக்கு கடைகாரர் அண்ணே படம் போட்டாலே ஏதும் தேறாது போடாட்டி நான் கடைய காலி பண்றேன் அப்படின்னு சென்னாரு சரி அப்படி இப்படின்னு வர கொஞ்சம் நஞ்ச வருமானமும் போயிடப்போகுதுன்னு துணிஞ்சி ஒரு படத்தை போடுறேன் பாத்துட்டு எப்படி இருக்குன்னு கண்டிப்பா செல்லுங்க.
பாருங்க இந்த படத்துல நம்ம ஊரு சீரியல் பாக்குற அம்மா போல இருக்கு. புள்ள நம்மளைப்போல நக்கல் புடிச்ச அராத்து போல் என்ன பண்ணுறான்னு பாருங்க.
Friday, January 27, 2006
கூடைப்பந்து
எனக்கு எல்லாம் அந்த பந்த எடுத்து பக்கத்துல போயி நின்ன வாக்குலயே போட முடியலை ஆனா இங்க இந்த மக்களை பாருங்க ஒக்கா மக்கா நின்னு போடுதானுங்க, உக்கந்து போடு தானுங்க, பறந்து போடுதானுங்க வந்து பாத்துட்டு தான் போங்களேன்.
Working From SPA
நம்ம எல்லாம் வீட்ல இருந்து வேலை பாக்குறேன் அப்படின்னு கூத்து அடிப்போம் ஆனா இங்க இந்த அம்மணி பாருங்க SPAல இருந்து எப்படி வேலை பாக்குறாங்கன்னு.
Wednesday, January 25, 2006
அரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சிட்டான்....
தமிழ் பேசும் நல்லுலகிற்கு வணக்கங்கள் பல, இது என்னுடைய வீடியோ பதிவு. தமிழில் இது போல இருக்கா இல்லையான்னு தெரியலை. இது நான் செந்தமா எடுத்த வீடியோ இல்லிங்கோ அங்கன இங்கா சுட்டு போடுறது தானுங்கோ. திட்றதா இருந்தா படத்தை சொந்தமா சுட்டவங்களை திட்டுங்கோ வாழ்த்துவதாக இருந்தா அவன்கிட்ட இருந்து சுட்ட இவனை வாழ்த்துங்கோ. ஏறகனவே அங்க மொக்க போடுறது பத்தாதுன்னு இங்க வேற வந்துட்டான்டா அப்படின்னு நீங்க திட்டுவது தெரிகிறது. என்ன பண்றது தமிழ்ர்களின் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. சரி நம்ம தமிழ்பசங்க அடிக்கிற லுட்டியோட மங்களகரமான வீடியோவுடன் இந்த பதிவை ஆரம்பிப்போமா? இது சும்மா பாத்தா மட்டும் புரியாது சத்தத்தோட பாருங்க. பசங்க கலக்கி இருப்பங்க.
என்ன படம் பாத்திங்களா அப்படியே நல்லா இருக்கா இல்லையான்னு செல்லிப்போட்டு போறது.
என்ன படம் பாத்திங்களா அப்படியே நல்லா இருக்கா இல்லையான்னு செல்லிப்போட்டு போறது.
Subscribe to:
Posts (Atom)